என் மலர்tooltip icon

    உலகம்

    நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது
    X

    நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது

    • பெல்ஜியம் குடியுரிமை கொண்டவர் நேஹல் மோடி.
    • இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டிருந்தது இன்டர்போல்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி பண மோசடியில் குற்றம் சாட்டப்பட்டவர் நிரவ் மோடி. வைர தொழில் அதிபரான இவர், வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இவர் சகோதரர் நேஹல் மோடி. இவர் சாட்சிகளை அழித்தல் உள்ளிட்ட உதவியை சகோதரருக்கு செய்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

    பெல்ஜியம் குடியுரிமை பெற்ற இவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் இன்டர்போலிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இரு அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று இன்டர்போல் நேஹல் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது.

    இந்த நிலையில் நேஹல் மோடியை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். அவரை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×