என் மலர்
உலகம்

திரவுபதி முர்மு, ரணில் விக்ரம சிங்கே
இலங்கைக்கு உதவ இந்தியா உறுதி பூண்டுள்ளது- குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு
- இலங்கை அதிபர் பதவிக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்து.
- இலங்கை இந்தியா இடையே இருதரப்பு உறவு நீண்ட கால அடிப்படையிலானது.
இந்திய குடியரசுத் தலைவராக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ரணிலுக்கு, முர்மு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் பதவியேற்றதற்கு உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் மிக நெருங்கிய அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. இலங்கை இந்தியா இடையே இருதரப்பு கூட்டு உறவு நீண்ட கால அடிப்படையிலானது. பாரம்பரியம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவுகளின் அடிப்படையில் அது மேலும் வலுவடையும். இலங்கை அதிபருக்கான பொறுப்புகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






