என் மலர்
உலகம்

Strait of Hormuz | ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உணவு பொருட்களின் விலை உயரும் அபாயம்
- ஹார்முஸ் ஜலசந்தி இரான் மற்றும் ஓமான் இடையே உள்ள மிகவும் குறுகிய கடல் பாதையாகும்.
- இந்த பாதையை குவைத், கத்தார், UAE, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிகமாக பயன்படுத்துகின்றன.
மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஹார்முஸ் ஜலசந்தி என்றால் என்ன?
இது இரான் மற்றும் ஓமான் இடையே உள்ள மிகவும் குறுகிய கடல் பாதை. அகலம் சுமார் 33 கி.மீ (21 miles) தான். உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழியாகும்.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதையை குவைத், கத்தார், UAE, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அதிகமாக பயன்படுத்துகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தியை இரான் முடக்கியாதா?
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் அவ்வழியே செல்லும் கப்பல்களை அவர்கள் நிறுத்தவில்லை. அதற்கு மாறாக அவ்வழியே செல்லும் கப்பல்களுக்கு "இங்கு செல்லுவது அபாயம்" என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தார்கள். இதனால் கப்பல் கம்பெனிகள் இவவழியே செல்ல அச்சப்பட்டன.
அந்த சமயத்தில் Lloyd's of London என்ற உலகின் மிக பழமையான கப்பல் இன்சூரன்ஸ் நிறுவனம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு war-risk இன்சூரன்சை ரத்து செய்தார்கள்.
இன்சூரன்ஸ் இல்லாமல் கப்பல் செல்ல முடியுமா என்றால் முடியாது. ஏன் என்றால் கடலில் கப்பல் விபத்து அல்லது தாக்குதல் நடந்தால், எண்ணெய் கசிவு நடந்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அதனால் கப்பல்கள் இன்சூரன்ஸ் இல்லாமல் சட்டப்படி பயணம் செய்ய முடியாது.
அதாவது ஹார்முஸ் ஜலசந்தி இப்போதும் திறந்து தான் உள்ளது.ஆனால் அவ்வழியே செல்லும் கப்பல் போக்குவரத்து வெகுவாக குறைந்து விட்டது.
பொதுவாக ஒரு நாளுக்கு 79 கப்பல்கள் சென்று வந்த இந்த பாதையில் இப்போது 7 கப்பல்கள் மட்டும் சென்று வருகிறது.
கப்பல் இன்சூரன்ஸ் தொகை எவ்வளவு உயர்ந்தது?
போருக்கு முன்னர் இன்சூரன்ஸ் தொகை கப்பல் மதிப்பில் 0.25% மட்டும் தான். ஆனாள் இப்போது ஒவ்வொரு வாரமும் கப்பல் மதிப்பில் 1% இன்சூரன்ஸ் கட்டவேண்டும். பல கப்பல் கம்பனிகளால் இந்த தொகையை சமாளிக்க முடியாது.
இதன் தாக்கத்தால் நெதர்லாந்து கேஸ் விலை 52 சதவீதமும் இங்கிலாந்து கேஸ் விலை 48 சதவீதமும் ஆசியாவின் LNG விலை 39 சதவீதமும் அதிகரித்துள்ளது.
உரங்களின் விலை உயரும் அபாயம்
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உரங்களின் உலகளாவிய போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய உரங்களின் போக்குவரத்தில் 33% ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் மேற்கொள்ளப்படுகிறது. கத்தார், ஈரான், UAE ஆகிய நாடுகள் உலகளாவிய அளவில் முக்கிய உர ஏற்றுமதி நாடுகளாகும்.
உரங்களின் விலை உயர்வால் விவசாயிகள் உரங்களை குறைவாக பயன்படுத்துவார்கள். இதனால் விளைச்சல் வெகுவாக குறைந்து உணவு விநியோகம் பாதிக்கப்படும். உலகளாவிய அளவில் உணவு பொருட்க்ளின் விலை அதிகரிக்கும். இந்த விளைவுகளை நாம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் கண்கூடாக பார்க்கலாம்.






