search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹவுதி தொடர் தாக்குதல் எதிரொலி: களத்தில் இறங்கும் ஐரோப்பிய யூனியன்
    X

    ஹவுதி தொடர் தாக்குதல் எதிரொலி: களத்தில் இறங்கும் ஐரோப்பிய யூனியன்

    • ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடிவு.
    • ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் தடுத்து முறியடிக்கப்படும். பதிலடி கொடுக்கப்படாது.

    மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள செங்கடல் உலக வணிக பயணத்திற்கு முக்கியமானதாக இருந்து வருகிறது. சர்வதேச கடல் போக்குவரத்திற்கு முக்கியமானதாக கருதப்படும் செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இதுபோன்ற தாக்குதலை நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதலை முறியடிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து செங்கடலில் ரோந்து போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த வாரம் ஏடன் வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பலை தாக்க முயன்றனர். இங்கிலாந்து கப்பல் மீதும் தாக்குதல் நடத்தினர். இதற்கு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.

    இந்த நிலையில் ஐரோப்பிய யூனியன் செங்கடலில் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக உலகளாவிய அளவில் பொருட்களின் விலை உயர்வு அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

    பிப்ரவரி 17-ந்தேதிக்குள் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை கொள்கை தலைவர் ஜோசப் பொர்ரேல் தெரிவித்துள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் உளள ஏழு நாடகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை வழங்க தயாராக உள்ளன. பெல்ஜியம் ஏற்கனவே போர்க்கப்பல்களை அனுப்ப முடிவு செய்துள்ளது. ஜெர்மனியும் போர்க்கப்பல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பு பணியில் ஈடுபடும் நிலையில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×