என் மலர்tooltip icon

    உலகம்

    வங்கதேசத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழல் இன்னும் உருவாகவில்லை: ஜமாத் கட்சி குற்றச்சாட்டு
    X

    வங்கதேசத்தில் சுதந்திரமான தேர்தலுக்கான சூழல் இன்னும் உருவாகவில்லை: ஜமாத் கட்சி குற்றச்சாட்டு

    • அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது கவலை அளிக்கிறது.
    • தேர்தல் ஆணையம், சட்ட அமைப்புகள் முற்றிலும் நடுநிலையோடு தங்களுடைய பணியை செய்ய வேண்டும்.

    வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 12-ந்தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மறைந்த கலிதா ஜியாவின் பி.என்.பி. கட்சி நாடு முழுவதும் முன்னணி வகித்து வருகிறது. அடுத்த அரசை இந்த கட்சிதான் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி 2001-2006 ஆட்சிக்காலத்தில் பி.என்.பி.யுடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்று இருந்தது. தற்போது இந்த கட்சி மிகப்பெரிய கட்சியாக வளர்ந்து, முக்கிய எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது.

    கட்சியின் தலைவர் டாக்டர் ஷபிகுர் ரகுமான் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக அதிகாரிகள் பணியாற்றி வருவதாக குற்றம்சாட்டு வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஷபிகுர் ரகுமான் "நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சி தலைவர்கள், ஆர்வலர்கள் தொடர்ந்து கொல்லப்படுவது கவலை அளிக்கிறது. நியாயமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை இன்னும் உருவாகவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், தேர்தல் ஆணையம், சட்ட அமைப்புகள் முற்றிலும் நடுநிலையோடு தங்களுடைய பணியை செய்ய வேண்டும். அரசு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெற சட்டம்- ஒழுங்கை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    Next Story
    ×