search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கனடா பிரதமருக்கு கொரோனா- தடுப்பூசி போட்டிருப்பதால் நன்றாக இருப்பதாக தகவல்
    X

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 

    கனடா பிரதமருக்கு கொரோனா- தடுப்பூசி போட்டிருப்பதால் நன்றாக இருப்பதாக தகவல்

    • பொது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
    • தடுப்பூசி போடாதவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    ஒட்டாவா:

    கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று அவர் பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிக்கப்பட்டது.

    இது குறித்து தமது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

    எனக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் பொது சுகாதார வழிகாட்டு தல்களைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். நான் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருக்கிறேன்.

    எனவே, நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால், கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நமது சுகாதார அமைப்பையும், மற்றவர்களையும் மற்றும் நம்மையும் பாதுகாப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த ஜனவரி மாதம் ஜஸ்டின் ட்ரூடோ முதல் முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனிமைப்படுத்துல் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் அவர் குணமடைந்தார்.

    Next Story
    ×