என் மலர்
உலகம்

எகிப்தில் கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து: 35 பேர் பரிதாப பலி
- எகிப்தில் கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 35 பேர் உயிரிழந்தனர்.
- பெஹய்ரா பகுதியில் நிகழ்ந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கெய்ரோ:
எகிப்தில் உள்ள பெஹய்ரா பகுதியில் சென்று கொண்டிருந்த கார்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்தவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எகிப்தில் விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
Next Story






