என் மலர்
உலகம்

துருக்கியில் சோகம்: அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி
- அங்காராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது.
- தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
அங்காரா:
துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4-வது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின் மளமளவென அந்தக் கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. இதனால் அந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
ஆனாலும், இந்த தீ விபத்தில் பச்சிளம் குழந்தை உள்பட 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். 30-க்கும் மேற்பட்டோருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. மீட்புப் படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story






