என் மலர்

  உலகம்

  புதிய அதிபருக்கு எதிராகவும் தொடங்கியது போராட்டம்- இலங்கையில் மீண்டும் பதற்றம்
  X

  புதிய அதிபருக்கு எதிராகவும் தொடங்கியது போராட்டம்- இலங்கையில் மீண்டும் பதற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம்

  கொழும்பு:

  இலங்கையில் மக்கள் புரட்சி தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பின்னர் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.

  புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக கோரி அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரணிலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

  இதற்கிடையே, நாளை முதல் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×