என் மலர்

  உலகம்

  ஸ்பெயினில் சோகம்- ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
  X

  பேருந்து விபத்து

  ஸ்பெயினில் சோகம்- ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்க நடவடிக்கை
  • கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி மீட்பு.

  மேட்ரிட்:

  ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள லுகோ மற்றும் வீகோ நகரங்களுக்கு இடையே இரவு நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.

  பாலத்தின் தடுப்பு சுவர் கடுமையாக சேதமடைந்திருப்பதைக் கவனித்த அந்த வழியே சென்றவர், பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது குறித்து அவசர சேவை பிரிவினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட மீட்பு படையினர் தண்ணீருக்குள் மூழ்கிய பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


  இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கயிற்றின் உதவியுடன் பேருந்து ஓட்டுநர் மற்றும் பெண் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். ஆற்று நீரோட்டம் மற்றும் கனமழை காரணமாக உடல்களை மீட்கும் முயற்சி தடைபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Next Story
  ×