search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரான்
    X
    ஈரான்

    ஈரானிடம் உச்ச வரம்பை விட அதிக யுரேனியம்- சர்வதேச அணுசக்தி முகமை எச்சரிக்கை

    யுரேனிய உலோகத்தை கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.
    நியூயார்க்:

    கடந்த 2015-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் போடப்பட்ட அணுசக்தி பரவல் ஒப்பந்தத்தின்படி ஈரான் 300 கிலோ யுன்ரேனியத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஈரான் 3809 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம்சாட்டியுள்ளது.

    இது ஈரானுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பை விட 13 மடங்கு அதிக யுரேனியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய உலோக உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. யுரேனிய உலோகத்தை கொண்டு அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்பதால், இவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன. 
    Next Story
    ×