search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    குவாட் உச்சி மாநாடு
    X
    குவாட் உச்சி மாநாடு

    இந்தோ- பசிபிக் பகுதியில் அமைதியை உறுதி செய்த குவாட் அமைப்பு

    இந்தோ-பசுபிக் பகுதியில் சுதந்திரமான, திறந்த நிலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நாடுகளின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கக்கூடியதின் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர்.
    டோக்கியோ, இந்தியா, அமெரிக்கா, அஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் ஒன்றினைந்து 'குவாட்' என்ற அமைப்பை உருவாகியுள்ளன. இந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானில் இன்று நடைபெற்றது. இந்த உச்சிமாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்றனர். குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் 4 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்பது இது 2-வது முறையாகும். அதன்படி, இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா ஆகியோர் பங்கேற்றனர்.

    இந்த மாநாட்டில் பல்வேறு விவகாரங்கள் குறித்து 4 நாட்டு தலைவர்களும் ஆலோசித்தனர். அப்போது, இந்தோ-பசுபிக் பகுதியில் சுதந்திரமான, திறந்த நிலையிலான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நாடுகளின் இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்கக்கூடியதின் முக்கியத்துவம் குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் அமைப்பு உறுதிபூண்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த குவாட் நாடுகளின் தலைவர்கள் உறுதிபூண்டுள்ளனர்.

    உலகளாவிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1267 (1999)-ன் படி நியமிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் உட்பட அனைத்து பயங்கரவாத குழுக்களுக்கும் எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுப்போம் என்பதை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

    26/11 மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதல்கள் உட்பட பயங்கரவாத தாக்குதல்களுக்கு எங்கள் கண்டனத்தை மீண்டும் வலியுறுத்துகிறோம். ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2593 (2021)-ம் நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். இது ஆப்கானிஸ்தானை இனி எந்த நாட்டையும் அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ பயன்படுத்தக்கூடாது. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு நிதியளிக்க வேண்டும் என்று மாநாட்டிற்கு பின் குவாட் அமைப்பு வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பேசிய பிரதமர் மோடி, குறுகிய காலத்தில் உலகில் குவாட் அமைப்பு தனக்கென ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. குவாட்டின் தொலைநோக்கு பார்வை இன்று விரிவடைந்துள்ளது. அதன் செயல்முறை சிறந்த வடிவம் பெற்றுள்ளது. நம்முடைய பரஸ்பர நம்பிக்கை மற்றும் மனவுறுதி ஆகியவை ஜனநாயக சக்திகளுக்கு புதிய ஆற்றலும் மற்றும் ஆர்வமும் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. தடுப்பூசி வினியோகம், பருவகால செயல்முறை, இடர்பாடுகளில் இருந்து மீண்டெழும் திறன், பேரிடர் மேலாண்மை மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பரஸ்பர ஒருங்கிணைப்பு அதிகரித்திருந்தது. இதனால், இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திர தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டது என கூறியுள்ளார்.

    இதேபோன்று ஆஸ்திரேலிய தேர்தலில் வெற்றி பெற்று புதிய பிரதமரான அந்தோணி அல்பேனீசுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினையும் தெரிவித்து கொண்டார். பதவியேற்று 24 மணிநேரத்தில் எங்களுடன் இந்த உச்சி மாநாட்டில் நீங்கள் கலந்து கொண்டுள்ளது குவாட் நட்புறவின் வலிமையையும் மற்றும் அதில் உங்களது ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது என்று கூறியுள்ளார்.

    இதையும் படியுங்கள்.. பகவந்த் மானின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை கண்ணீரை வரவழைத்தது- அரவிந்த் கெஜ்ரிவால் நெகிழ்ச்சி
    Next Story
    ×