என் மலர்

  உலகம்

  தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் வீடுகள்
  X
  தாக்குதலால் உருக்குலைந்து காணப்படும் வீடுகள்

  உக்ரைனில் ஏராளமான தானியங்களை கைப்பற்றியது ரஷிய படைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உலகில் தானிய உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான உக்ரைனில், ரஷிய படையெடுப்பு காரணமாக தானிய ஏற்றுமதி முடங்கியது.
  கீவ்:

  உக்ரைனின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் ரஷிய படைகள், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ஏராளமான தானியங்களைக் கைப்பற்றுவதாக உக்ரைன் விவசாயத்துறை மந்திரி டாரஸ் பிசோட்ஸ்கி தெரிவித்தார். ஜபோரிஜியா, கெர்சன், டோனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் இருந்து பல லட்சம் டன் தானியங்கள் எடுக்கப்பட்டதாக, உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வந்ததாக அவர் கூறினார்.

  உலகில் தானிய உற்பத்தி அதிகம் உள்ள நாடுகளில் உக்ரைனும் ஒன்று. ஆனால், ரஷிய படையெடுப்பு காரணமாக உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதி முடங்கியது. இதனால் உலக சந்தையில் தானிய விலை உயர்ந்தது. மேலும், இறக்குமதி செய்யும் நாடுகளில் கடுமையான தானிய பற்றாக்குறை தொடர்பான கவலையும் எழுந்துள்ளது. 

  உக்ரைன் எரிபொருள் உள்கட்டமைப்பை ரஷியா அழிப்பதுடன், துறைமுகங்களையும் தடுப்பதால் உக்ரைனில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுவதாக ஜெலன்ஸ்கி கூறியது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×