search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போராடும் சீன மக்கள்
    X
    போராடும் சீன மக்கள்

    கொரோனா நோயாளிகள் தங்குவதற்கு மக்களை வீட்டை விட்டு வெளியேற்றும் சீன அரசு

    சீன அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர்.
    சீனாவில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சீனாவின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் ஷாங்காய் நகரில் இதுவரை கண்டிராத பரவல் ஏற்பட்டுள்ளது. 

    தினமும் 20,000 தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    இந்நிலையில் அந்நகரில் தொற்றை பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. அதில் ஒன்றாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்கு இடங்களை ஏற்பாடு செய்வதற்கு வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்றும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

    இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில் பாதுகாப்பு உடை அணிந்துள்ள சீன போலீசார் குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்து  மக்களை வெளியேற்ற வருகின்றனர். அவர்களை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துகின்றனர்.

    மற்றொரு வீடியோவில் போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களை குடியிருப்புகளுக்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

    இந்த வீடியோக்களை சீன அரசு நீக்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
    Next Story
    ×