search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்
    X
    இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட்

    புச்சா படுகொலை தொடர்பான படங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - இஸ்ரேல் பிரதமர் வேதனை

    புச்சாவில் நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.
    ஜெருசலேம்:

    உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போர் தொடுத்து 40 நாட்களுக்கு மேலாகிறது. தலைநகருக்கு அருகிலுள்ள பேரழிவிற்கு உள்ளான நகரத்திலிருந்து பின்வாங்கி, ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற பயங்கரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியபோது தெருக்களிலும் வெகுஜன புதைகுழிகளிலும் டஜன் கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் உலக தலைவர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

    புச்சா படுகொலைக்கு ஐக்கிய நாடுகள் சபை உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கடு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், ரஷிய வீரர்கள் புச்சா நகரை விட்டு வெளியேறிய பிறகு கண்டெடுக்கப்பட்ட உடல்கள் அதிர்ச்சி அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், புச்சா தொடர்பான புகைப்படங்களை  கண்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவற்றை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். படங்கள் மிகவும் பயங்கரமானவை. உக்ரைன் குடிமக்களின் துன்பம் மிகப்பெரியது, எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×