என் மலர்

  உலகம்

  கோப்புப்படம்
  X
  கோப்புப்படம்

  பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 6 பாதுகாப்பு படையினர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் 22 பேர் காயம் அடைந்தனர்.
  பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் தப்பி செல்லாமல் இருக்க அந்த பகுதியில் உள்ள சாலைகள் சீல் வைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  Next Story
  ×