search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா அதிகரிப்பு: ஷாங்காயில் கடும் கட்டுப்பாடு- மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை

    சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், ஷாங்காய் மாகாணத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள மாவட்டம் புடோங். இந்த மாவட்டத்தில் முன்னணி நிதி நிறுவனங்கள், ஷாங்காய் பங்குச் சந்தை உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்கள் அமைந்துள்ளன. இந்த மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்காக பரிசோதனை செய்ய மட்டுமே வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புவாசிகள் தாங்கள் குடியிருக்கும் வளாகத்தில் உள்ள நடைபாதை, கேரேஜ் மற்றும் திறந்த வெளி பகுதியில் நடக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    ஷாங்காய் மாநகராட்சி சுகாதார கமிஷன் அதிகாரி வு குயியான்யு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இன்று புதிதாக கொரோனா பாதிப்பு 4477 என அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    நிதி ஆதாரத்தின் மையம் என அழைக்கப்படும் புடோங் மாவட்டத்தில் 2.5 கோடி மக்கள் இரண்டு நிலையாக வீட்டிற்குள் அடைத்து வைக்க தொடங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மாகாணத்தின் பாதி அளவு லாக் டவுன் நிலையை சந்தித்துள்ளது. ஒட்டுமொத்த நகரில் உள்ள மக்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, பொதுமக்கள் அவர்கள் வீடு இருக்கும் வளாகத்தில் நடந்த செல்லவும், அடுக்குமாடி குடியிருப்பில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், வெளியேற அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஒருவேளை ஷாங்காய் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் 6.2 மில்லியன் மக்கள் வீட்டிற்குள் முடங்கும் அபாயம் ஏற்படும்.
    Next Story
    ×