என் மலர்
உலகம்

விபத்து
பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து- 10 பேர் உயிரிழப்பு
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு மாகாண முதல்வர் உத்தரவிட்டார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில், பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மர்தானில் இருந்து காலாகோட் நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். 16 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் டிர் கோகிஸ்தான் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து கைபர்-பக்துன்க்வா மாகாண முதல்வர் மெஹ்மூத் கான் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

Next Story