search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இம்ரான் கான்
    X
    இம்ரான் கான்

    நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன்- இம்ரான் கான் ஆவேசம்

    ஒயிட் காலர் குற்றவாளிகளால் பாகிஸ்தான் ஏழை நாடாக உள்ளது என்றும், கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை மூன்று எலிகள் சூறையாடி வருவதாகவும் இம்ரான் கான் பேசினார்.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு மீது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இம்ரான் கானுக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சியை சேர்ந்த 24 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது இம்ரான் கானுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    சொந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்று அரசு கவிழும் நிலை உள்ளது. எனவே, வாக்கெடுப்பு முன்பாகவே இம்ரான் கான் பதவி விலகலாம் என்ற தகவல் பரவியது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், இம்ரான் கானின் பலத்தை காட்டும் வகையில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆளும் பிடிஐ கட்சியின் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இம்ரான் கான் பேசுகையில், தனது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட பணிகளை குறிப்பிட்டார். பாகிஸ்தான் வரலாற்றில் தனது அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் செய்யாத பணிகளை, வேறு எந்த அரசாங்கமும் செய்யவில்லை என்று கூறினார்.

    “ஒயிட் காலர் குற்றவாளிகளால் பாகிஸ்தான் ஏழை நாடாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் நாட்டை மூன்று எலிகள் சூறையாடி வருகின்றன. 

    இந்த இம்ரான் கான் ஒருபோதும் தலைவணங்க மாட்டான், தனது நாட்டை யாருக்கும் பணிய விடமாட்டான். நமது வெளியுறவுக் கொள்கை வெளியில் இருந்து கையாளப்படுகிறது. அரசாங்கத்தையும் வாழ்க்கையையும் தியாகம் செய்ய முடியும், ஆனால் குற்றவாளிகளை மன்னிக்க முடியாது’ என்றும் இம்ரான் கான் பேசினார்.
    Next Story
    ×