என் மலர்
உலகம்

தைவானில் நிலநடுக்கம்
தைவானில் நிலநடுக்கம் - புதிய பாலம் இடிந்தது
தைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்தது. இதில் ஒருவர் காயம் அடைந்தார்.
தைபே:
தைவான் தலைநகர் தைபேயில் இருந்து சுமார் 182 கிலோ மீட்டர் தூரத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கின. அப்போது பொதுமக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
நில அதிர்வை உணர்ந்த அவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நில நடுக்கத்தால் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்தது. இதில் ஒருவர் காயம் அடைந்தார். உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதையும் படியுங்கள்...விமான விபத்தில் இதுவரை யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை - சீன அதிகாரிகள் தகவல்
Next Story