என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உலகம்
X
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியது ரஷியா
Byமாலை மலர்7 March 2022 6:07 PM GMT (Updated: 7 March 2022 6:07 PM GMT)
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால் இந்த நடவடிக்கையை ரஷியா மேற்கொண்டு உள்ளதாகத் தெரிகிறது.
மாஸ்கோ:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் 12 நாட்களை எட்டியுள்ளது. இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. உக்ரைனில் உள்ள ராணுவ தளங்களை அழிக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டு வருவதாக உக்ரைன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷியா 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சுவிட்சர்லாந்து, அல்பேனியா, ஐஸ்லாந்து, மொனாக்கோ, நார்வே உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுக்கும் விவகாரத்தில் ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களுக்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளை தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகள் போன்றவை ரஷிய எதிர்ப்பு நிலையை கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
Next Story
×