search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைனில் போர் நடைபெறும் பகுதி, மத்திய இணை மந்திரி வி கே சிங்
    X
    உக்ரைனில் போர் நடைபெறும் பகுதி, மத்திய இணை மந்திரி வி கே சிங்

    உக்ரைன் தலைநகரில் இந்திய மாணவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது - மத்திய மந்திரி தகவல்

    காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அந்த மாணவர் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
    கீவ்:

    உக்ரைன்  மீது போர் தொடுத்துள்ள ரஷியா முக்கிய நகரங்களில் ஆங்காங்கே ஏவுகணை வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதனால் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில், தலைநகர் கீவ்வில் ஒரு இந்திய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை இணை மந்திரி வி கே சிங் தெரிவித்துள்ளார். 

    இந்திய மாணவர்கள் போலந்தில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வரும் அவர், தலைநகர் வார்ஷாவில் செய்தியாளர்களிடம் பேசினார். 

    போர் காரணமாக தலைநகர் கீவ்வில் இருந்து வெளியேற முயன்ற இந்திய மாணவர் ஒருவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளதாக தகவல் வந்துள்ளதாகவும், அவர் உடனடியாக  அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும் அந்த மாணவர் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. 

    உக்ரைனில் மீட்பு நடவடிக்கையின் போது குறைந்த பட்ச இழப்புடன் அதிக அளவு மாணவர்களை பாதுகாப்புடன் வெளியேற்ற மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

    அண்மையில்  கார்கிவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலின் போது கர்நாடகா மாணவர் நவீன் உயிரிழந்தத நிலையில் தற்போது மற்றொரு இந்திய மாணவர் துப்பாக்கி குண்டு தாக்கி காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×