என் மலர்

  உலகம்

  தேடுதல் வேட்டை
  X
  தேடுதல் வேட்டை

  அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை வீழ்த்தியது சோமாலியா ராணுவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பயங்கரவாதிகள் அனைவரையும் அழிக்கும் வரை ராணுவ நடவடிக்கையை நிறுத்தமாட்டோம் என்று கமாண்டர்கள் தெரிவித்தனர்.
  மொகடிஷு:

  சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அல்-ஷபாப் அமைப்பு, பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக விளங்குகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

  அவ்வகையில், தெற்கு மாநிலமான ஜூபாலேண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 4 கிராமங்களில் உள்ள அவர்களின் மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறினர். பயங்கரவாதிகள் அனைவரையும் அழிக்கும் வரை நடவடிக்கையை நிறுத்தமாட்டோம் என்றும் கமாண்டர்கள் தெரிவித்தனர்.
  Next Story
  ×