search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    அன்டோனியோ குட்டரெஸ்
    X
    அன்டோனியோ குட்டரெஸ்

    ஏமன் மீது சவுதி விமான தாக்குதல் - ஐ.நா.பொது செயலாளர் கண்டனம்

    ஏமனில் 2015 முதல் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்திகளுக்கும், சவுதி அரேபியாவின் ஆதரவு பெற்ற அரச படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தொடர்கிறது.
    நியூயார்க்:

    ஏமனில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெறும் சூழ்நிலையிலும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அகதிகள் ஏமன் வழியாக சவுதி அரேபியா அல்லது வளம்மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும்வரை ஏமனில் உள்ள தடுப்பு மையங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். 
     
    இதற்கிடையே, ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள சடா மாகாணத்தில் நேற்று சவுதி அரேபியா அரசு விமான தாக்குதல் நடத்தியது. இதில் அகதிகளுக்கான தற்காலிக தடுப்பு மையத்தில் தங்கியிருந்த தென் ஆப்பிரிக்க அகதிகள் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அங்கு மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஏமன் மீது சவுதி விமான தாக்குதல் நடத்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஏமன் நாட்டுப் பொதுமக்கள் மீது குண்டுமழை பொழிவதை ஏற்கமுடியாது என சவுதி அரேபியாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.

    Next Story
    ×