என் மலர்
உலகம்

கோப்பு புகைப்படம்
இந்துக்களுக்கான முதல் சுடுகாடு - பிரிட்டன் அரசு அனுமதி
சுமார் 500 பேர் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் வகையில், 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுடுகாடு அமையவுள்ளது.
பக்கிங்ஹாம்ஷயர்:
இந்துக்களுக்கான முதல் சுடுகாடு தென் கிழக்கு இங்கிலாந்தில் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் கட்டப்படவுள்ளது. பிரிட்டனில் பிற மதத்தினருக்கு இருப்பது போன்று இந்துக்களுக்கும் தனி சுடுகாடு வேண்டும் என பிரிட்டன் வாழ் இந்துக்களால் அனுபம் மிஷன் என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கை நீண்ட நாட்களாக ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்த நிலையில், தற்போது பிரிட்டனின் திட்ட ஆய்வாளர் அலுவலகம் சுடுகாடு கட்டிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து பக்கிங்ஹாம்ஷயரில் உள்ள ஸ்வாமி நாராயணன் கோயிலுக்கு அருகில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சுடுகாடு அமையவுள்ளது. தகனம், ஈமச்சடங்கு என ஒவ்வொரு சடங்கிற்கும் ஏற்றவகையில் தனித்தனி பகுதிகள் கொண்டு இந்த சுடுகாடு அமைக்கப்படவுள்ளது. இந்த சுடுகாட்டில், இறுதி சடங்கில், சுமார் 500 பேர் வரை கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






