search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட்
    X
    தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட்

    அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புகிறோம்: ஆப்கன் பிரதமர்

    ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது என்றும் அது எங்கள் கொள்கை அல்ல என்றும் அந்நாட்டு தற்காலிக பிரதமர் முல்லாஹசன் அகுண்ட் தெரிவித்துள்ளார்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை அடுத்து தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

    அப்போது, கடந்த காலங்கள் போல் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்றும் தலிபான் அமைப்பு கூறியது. 

    ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறையும், அடுத்தடுத்த தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது. 

    இதற்கு அண்டை நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.

    இந்நிலையில், அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை வைத்திருக்க விரும்புவதாக ஆப்கானிஸ்தான் தற்காலிக பிரதமர் முல்லா ஹசன் அகுண்ட் கூறியுள்ளார்.

    இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-

    இஸ்லாமிய எமிரேட் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு, பொருளாதார உறவு மற்றும் சக வாழ்க்கை கொண்டிருக்க விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் எந்த நாட்டின் உள்விவகாரங்களிலும் தலையிடாது. அது எங்கள் கொள்கை அல்ல. 

    ஆப்கானிஸ்தானில் இருந்து எந்த நாட்டிற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். எங்கள் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஆப்கானிஸ்தான் மீது அழுத்தம் கொடுப்பது யாருக்கும் பயனளிக்காது.

    இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×