என் மலர்
செய்திகள்

பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக்
மகாத்மா காந்தி நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரிட்டன் மந்திரி
தீபாவளி பண்டிகையை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக்.
தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.
பிரிட்டனில் உள்ள இந்தியர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் அரசு தீபாவளி கொண்டாட்டம் நாளில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் மரபுகளை போற்றும் வகையில், 5-பவுண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டுள்ளது. பிரிட்டன் மந்திரி ரிஷி சுனக், மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை வெளியிட்டார்.
Next Story