என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
சீன தடுப்பூசி பாதுகாப்பானது - உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம்
By
மாலை மலர்13 May 2021 12:02 AM GMT (Updated: 13 May 2021 12:02 AM GMT)

சீனாவில் கொரோனாவுக்கு எதிராக சைனோபார்ம் என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
ஜெனீவா:

இது குறித்து ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் உதவி தலைமை இயக்குனர் மரிய ஏஞ்சலா சிமாவோ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “கடுமையான கொரோனாவுக்கு எதிரான செயல் திறன் மிக்கது சீனாவின் சைனோபார்ம் தடுப்பூசி என்பதற்கு எங்களிடம் ஆதரவு உள்ளது. இந்த தடுப்பூசி உலகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 6 கோடியே 20 லட்சம் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது பாதுகாப்பானது. செயல்திறன் மிக்கது” என குறிப்பிட்டார்.
கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதியை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் வழங்கியது நினைவுகூரத்தக்கது.
Next Story
×