search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிகாரிகள் வெளியேறிய காட்சி
    X
    அதிகாரிகள் வெளியேறிய காட்சி

    அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை மூட உத்தரவிட்டதால் பரபரப்பு

    ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று திடீரென அமெரிக்க நாடாளுமன்றத்தை மூட உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்கான சான்றிதழ் வழங்குவதற்காக கடந்த 6-ந்தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்புப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி கலவரத்தை அடக்கினர்.

    நாளைமறுநாள் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஒத்திகை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென நாடாளுமன்றத்தை மூட போலீசார் உத்தரவிட்டனர். அத்துடன் உள்ளே யாரும் வரவும், வெளியே செல்லவும் தடைவிதித்தனர்.

    பாதுகாப்பு போலீசார்

    உடனடியாக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படையினர் மின்னல் வேகத்தில் நாடாளுமன்ற வளாக்தில் குவிந்ததனர். செக் பாயின்ட் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    ஒத்திகையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர். அப்போது அதிகாரி ஒருவர் இது ஒத்திகை இல்லை எனக் கூறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் போலீசார் தரப்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள இடத்தில லேசான தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், வெளிப்புற பாதுகாப்பு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×