search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உஸ்ரா ஜியா
    X
    உஸ்ரா ஜியா

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவி

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளியினருக்கு அவர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    அந்த வகையில் தனது நிர்வாகத்தில் பல முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை அவர் நியமித்துள்ளார்.

    அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மூத்த தூதரக அதிகாரியுமான உஸ்ரா ஜியா என்ற பெண்ணுக்கு வெளியுறவுத்துறையில் முக்கிய பதவியை ஜோ பைடன் வழங்கியுள்ளார். சிவில் பாதுகாப்பு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான துணைச் செயலாளராக உஸ்ரா ஜியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெளியுறவுத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற உஸ்ரா ஜியா 2014 முதல் 2017 வரை பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை தலைவராக பணியாற்றி வந்தார். அதன் பிறகு அமைதி கட்டமைப்பிற்கான கூட்டணியின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் ஜனாதிபதி டிரம்பின் வெளியுறவு கொள்கைக்கு எதிராக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    Next Story
    ×