என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புப்படம்
ஆப்கானிஸ்தானில் சக வீரர்கள் 7 பேரை விஷம் வைத்து கொன்ற ராணுவ வீரர்
By
மாலை மலர்6 Jan 2021 7:43 PM GMT (Updated: 6 Jan 2021 7:43 PM GMT)

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்கள் 7 பேரை விஷம் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்:
ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கஜினி மாகாணத்தில் ராணுவ சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 ராணுவ வீரர்கள் பணியில் இருந்தனர்.
அப்போது அவர்களில் ஒரு வீரர் தனது சக வீரர்கள் 7 பேருக்கும் உணவில் விஷத்தை கலந்து கொடுத்தார். இதனை அறியாத வீரர்கள் அந்த உணவை அருந்தினர். பின்னர் அவர்கள் சற்று நேரத்தில் சுருண்டு விழுந்தனர். அவர்கள் தங்களை காப்பாற்றும்படி அந்த ராணுவ வீரரிடம் கெஞ்சினர். ஆனால் அவரோ தான் வைத்திருந்த துப்பாக்கியால் சக வீரர்கள் 7 பேரையும் சுட்டார். இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதன் பின்னர் அந்த ராணுவ வீரர் ராணுவ சோதனைச்சாவடியில் இருந்த துப்பாக்கிகள் வெடிகுண்டுகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த சம்பவம் கஜினி மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கான பின்னணி என்ன என்பது தெரியாத நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் இது பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறது.

Next Story
×