என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்
  X
  கோப்பு படம்

  நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
  நியூயார்க்:

  அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள நசவ் நகரின் ஃபிரிபோர்ட்டில் உள்ள மார்ட்டின் லூதர் கிங் பூங்காவில் இன்று மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். 

  இந்த துப்பாக்கிச்சூட்டில் 21 வயது நிரம்பிய நபர் மற்றும் 19 வயது நிரம்பிய நபர் என இரண்டுபேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.

  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

  ஆனால், துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த 21 வயது நிரம்பிய நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு நபர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார்.

  இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  Next Story
  ×