search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைப்படகுகள் (கோப்பு படம்)
    X
    விசைப்படகுகள் (கோப்பு படம்)

    தமிழக மீனவர்களின் 94 விசைப்படகுகளை அழிக்க உத்தரவிட்டது இலங்கை கோர்ட்

    தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 94 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கொழும்பு:

    எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதும் அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இலங்கை மீன்பிடி துறைமுகங்களை  ஒட்டிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக பராமரிப்பு இன்றி இருப்பதால் பல விசைப் படகுகள் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. படகுகளை விடுவிக்கக் கோரி மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையில் தமிழக மீனவர்களிடம் இருந்து இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்திருந்த 121 படகுகளில் 94 படகுகளை அழிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 88 படகுகள் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

    கடற்கரை மாசடைவதாகவும், இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் நீதிமன்றம் படகுகளை அழிக்க உத்தரவிட்டிருக்கிறது.
    Next Story
    ×