என் மலர்

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    சாண்டியாகோ :

    தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஓவல்லே நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 7.16 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது வீடுகள் கடைகள் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. மேலும் பெரிய அளவில் பொருள் சேதம் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.
    Next Story
    ×