என் மலர்

  செய்திகள்

  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா
  X
  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா

  ’வியக்கத்தகு இந்தியாவின் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள்’ - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு டுவிட்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வியக்கத்தகு இந்தியாவின் மக்களுக்கு சுதந்திரதின வாழ்த்துகள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
  ஜெருசலேம்:

  இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் இந்தியாவுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

  இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய மக்களுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சுதந்திர தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

  இந்திய சுதந்திர தினம் தொடர்பாக டுவிட்டரில் நெதன்யாகு பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘எனது நல்ல நண்பரான இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும், வியக்கத்தகு இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பெருமைகொள்ள பல உள்ளன’ என தெரிவித்துள்ளார். 
  Next Story
  ×