என் மலர்

    செய்திகள்

    காங்கோ விமான விபத்து
    X
    காங்கோ விமான விபத்து

    காங்கோ நாட்டில் விமானம் வீடுகள் மீது விழுந்து நொறுங்கியது- 27 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    காங்கோவில் விமானம் ஒன்று மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

    கோமா:

    ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள கோமா நகரத்தில் இருந்து பெனி நகருக்கு ‘டார்னியர் 288’ ரக சிறிய விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

    அதில் 17 பயணிகளும், 2 ஊழியர்களும் இருந்தனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள வீடுகள் மீது விழுந்து நொறுங்கியது.

    மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த பயணிகள், வீடுகளில் இருந்த பொது மக்கள் என 27 பேர் பலியானார்கள். மீட்பு படையினர் விரைந்து சென்று விமானத்தில் பிடித்த தீயை போராடி அணைத்தனர். பின்னர் பலியானவர்கள் உடல்களை மீட்டனர்.

    இடிபாடுகளில் சிலர் சிக்கி இருக்ககூடும் என்று கருதுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் இதுவரை விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    காங்கோ நாட்டில் பாதுகாப்பு மற்றும் மோசமான பராமரிப்பு காரணமாக அடிக்கடி விமான விபத்துகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×