என் மலர்

    செய்திகள்

    கோப்புப் படம்
    X
    கோப்புப் படம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்-போலீசாரிடையே கடும் மோதல்: 22 பேர் பலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தலிபான் மற்றும் போலீசார் இடையிலான பயங்கர மோதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் நாளுக்குநாள்  அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதிகளை அழிக்கும் நோக்கில் அந்நாட்டு பாதுகாப்புபடையினர், போலீசார் மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையினர் தரைவழி மற்றும் வான்வெளி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இதனால் பயங்கரவாத குழுக்களுக்கும் பாதுகாப்புபடையினருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள காஸ்நி மாகாணத்துக்கு உள்பட்ட ஹோக்யானி மாவட்டத்தில் இன்று அதிகாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் 4 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புபடையினர் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர்.
    கோப்புப் படம்
    இதேபோல், காந்தஹார் மாகணத்தின் மைவ்வந் மாவட்டத்தில் உள்ள போலீசார் சோதனைச்சாவடி மீது பயங்கரவாதிகள் துப்பாகிச்சூடு நடத்தியும் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 4 பேர் உயிரிழந்தனர். போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்டனர்.

    இந்த இருவேறு தாக்குதல்களில் 15 தலிபான் பயங்கரவாதிகள் 7 போலீசார் ஆக மொத்தம் 22 பேர் உயிரிழந்தனர்.
    Next Story
    ×