என் மலர்

  செய்திகள்

  மய்யா - நேவர் திருமணம்
  X
  மய்யா - நேவர் திருமணம்

  கால்பந்து வீரருக்கு மறுநாள் மரணம்.. திருமணம் செய்துக் கொண்ட காதலி -நெகிழ்ச்சி சம்பவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நியூசிலாந்தைச் சேர்ந்த கால்பந்து வீரர், உயிரிழப்பதற்கு முந்தைய நாள் அவரது காதலியை திருமணம் செய்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
  வெல்லிங்டன்:

  நியூசிலாந்தைச் சேர்ந்தவர் நேவர் ஹெட்வர்ட். இவர் குயின்லாந்து பகுதியின் உள்ளூர் கால்பந்து வீரர் ஆவார். இவர் பல்வேறு உள்ளூர் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பாக விளையாடியுள்ளார்.

  நேவர், கடந்த சில நாட்களுக்கு முன் மூளையில் ஏற்பட்ட கட்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மன அழுத்தத்தின் காரணமாக வீட்டிலேயே ஒரு ஓரமாக ஒதுங்கி இருந்துள்ளார்.

  நேவர், நீண்ட நாட்களாக மய்யா எனும் பெண்ணை காதலித்து வந்தார். இவரது நிலையை உணர்ந்த மய்யா, உடனடியாக திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

  நேவர்,  ‘என்னால்  இயல்பாக மனிதர்களைப் போல செயல்படக்கூட முடியாத நிலையில் மய்யாவை திருமணம் செய்ய முடியாது’ எனக்கூறி மறுத்து வந்துள்ளார்.  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேவரை கடைசி நேரத்தில் எப்படியோ பேசி, மய்யா சம்மதம் வாங்கிவிட்டார். இதனையடுத்து குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோர் முன்னிலையில் நேவர்-மய்யா திருமணம் நடைப்பெற்றது.

  திருமணத்தின்போது நேவர் மற்றும் குடும்பத்தினர் சோகத்தோடு இருந்தனர். அப்போது காதலி மய்யா மற்றும் அவரது நண்பர்கள் நேவரை உற்சாகப்படுத்தும் வகையில் வரவேற்று நடனமாடினர்.  இந்நிலையில் நேவர், திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்துவிட்டார். அவரது காதல் மனைவி மய்யா, நேவரின் நினைவுகளுடன் வாழ்வதே வரம் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×