என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் நாட்டின் மிக உயரிய விருது அளித்து மலேசிய பிரதமருக்கு கவுரவம்
பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருது வழங்கி இன்று கவுரவிக்கப்பட்டது. #PakistanDay #MalaysianPM
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் தேசியநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு பாகிஸ்தான் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனையேற்ற மஹதிர் முஹம்மது நேற்று இஸ்லாமாபாத் வந்தார்.

பின்னர் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பேசிய மஹதிர் முஹம்மது பாகிஸ்தான் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து துறைகளிலும் மலேசியா அரசு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார். #PakistanDay #MalaysianPM

இன்று பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற தேசியநாள் விழாவில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் ‘நிஷான் - இ- பாகிஸ்தான்’ எனப்படும் மிக உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான் கலந்து கொண்டார்.

Next Story