என் மலர்
செய்திகள்

துபாயில் நியூசிலாந்து தாக்குதலை கொண்டாடிய ஊழியர் நீக்கம்
நியூசிலாந்து மசூதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தி பொதுமக்களை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலை கொண்டாடிய துபாய் நிறுவனத்தின் ஊழியர் பணிநீக்கம் செய்துள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended
துபாய்:
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் 15ம் தேதி தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 50 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த மனித தன்மையற்ற செயலுக்கு பல்வேறு நாட்டினரும், அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் துபாயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்த ஊழியர் ஒருவர், தனது முகநூல் பக்கத்தில், நியூசிலாந்து தாக்குதல் குறித்து கொண்டாடும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.
முதலில் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்னர் இதனை அறிந்த அந்த நிறுவனத்தின் தலைவர் அவரை பணியில் இருந்து நீக்கினார். மேலும் அந்த ஊழியர் துபாயை விட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #Mansuspended

துப்பாக்கி சூடு குற்றவாளி "ப்ரெண்டான் டாரன்ட்" என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி, 73 பக்கத்தில் தனது நோக்கங்களை தெரிவித்திருந்தான்.

Next Story