என் மலர்

  செய்திகள்

  முதல்முறையாக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற மெக்சிகன் திரைப்படம்
  X

  முதல்முறையாக ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற மெக்சிகன் திரைப்படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm
  லாஸ் ஏஞ்சல்ஸ்:

  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.

  இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  இந்த திரைப்படம் 1970களில்,  நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட  8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.  இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும்  நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வென்ற முதல் திரைப்படம் ஆகும்.  

  இவ்விருதினை பெற்ற கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டுப் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, இவற்றை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ் போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த விருதினை லிபோரியாவிற்கு சமர்ப்பிகிறேன்’ என்றார்.

  மேலும் இந்த திரைப்படம் சிறந்த கோல்டன் குளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான பஃப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm

  Next Story
  ×