search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு
    X

    ஜப்பானில் 400 ஆண்டுகள் பழமையான போன்சாய் மரம் திருட்டு

    ஜப்பானில் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள சாய்டாமா பிராந்திய பகுதியை சேர்ந்த மூத்த தம்பதி, தங்கள் வீட்டின் அருகே பூங்கா அமைத்து 3 ஆயிரம் போன்சாய் மரங்களை வளர்த்து வருகிறார்கள். போன்சாய் மரங்கள் என்பது இயற்கையில் பெரிதாக வளரக்கூடிய மரங்களை உரிய அளவுக்கு வளரவிடாது, முதிர்ந்த மரங்களின் தோற்றத்தில் குள்ளமாகவும், பார்வைக்கு அழகாகவும் இருக்கும்படி தொட்டிகளில் வளர்ப்பது ஆகும். இந்த நிலையில், அந்த தம்பதியின் பூங்காவிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், 8 போன்சாய் மரங்களை திருடி சென்றனர். திருடப்பட்ட மரங்களில் 400 ஆண்டுகள் பழமையான ஷிம்பாக்கு மரமும் ஒன்று. அந்த மரத்தின் மதிப்பு 90 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63 லட்சத்து 52 ஆயிரம்) ஆகும்.

    அந்த மரங்களை தாங்கள் குழந்தைகளை போல் வளர்த்து வந்ததாகவும், அவை காய்ந்து போனால் தாங்கள் பெருந்துயர் அடைவோம் என கூறும் அந்த தம்பதி, மரங்களை திருடி சென்றவர்கள் அவற்றுக்கு முறையாக நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். #BonsaiTree #Japan #Stolen #400yearoldtree
    Next Story
    ×