search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய்லாந்து சுற்றுச்சூழல் தினம் - பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடைகள், ஷாப்பிங் மால்கள் ஒப்பந்தம்
    X

    தாய்லாந்து சுற்றுச்சூழல் தினம் - பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க கடைகள், ஷாப்பிங் மால்கள் ஒப்பந்தம்

    தாய்லாந்து நாட்டில் இன்று தேசிய சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்ப்பதற்கு மிகப்பெரிய கடைகள் மற்றும் மால்கள் முன்வந்துள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic
    பாங்காக்:

    தாய்லாந்து நாட்டில் 1991ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 4-ம் தேதி தாய் சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு பல்வேறு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதால் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    அவ்வகையில் இன்று தாய் சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை பொதுமக்கள் இன்று தவிர்க்க வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. அதனை ஏற்று பல்வேறு கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க ஒப்புக்கொண்டுள்ளன.



    இதற்காக இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன், முன்னணி ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளை நடத்தும் நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. மருத்துவமனைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிப்பைகளை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    டிசம்பர் 4-ம் தேதியை பிளாஸ்டிக் பைகள் இல்லா நாளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அனைத்து கடைகளும் மால்களும் வாரத்தில் ஒரு நாளோ அல்லது சில நாட்களோ வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் பைகளை வழங்காமல், பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளன. #ThaiEnvironmentDay #CampaignAgainstPlastic 
    Next Story
    ×