search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவையும் அர்ஜென்டினாவையும் யோகாசனம் இணைக்கிறது - மோடி பெருமிதம்
    X

    இந்தியாவையும் அர்ஜென்டினாவையும் யோகாசனம் இணைக்கிறது - மோடி பெருமிதம்

    அர்ஜென்டினாவையும் இந்தியாவையும் சிறப்புக்குரிய யோகாசனம் கலை இணைக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.#Yogaconnecting #Modi #G20summit #ModiinG20
    பியூனஸ் அயர்ஸ்:

    அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வந்துள்ளார்.

    ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதி மன்னர் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசிய மோடி, ‘அமைதிக்காக யோகா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்சியில் ஏராளமான இந்தியர்களும், அர்ஜென்டினா நாட்டவர்களும் பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடையே உரையாற்றிய மோடி, இந்தியாவின் பழமை வாய்ந்த சிறப்புக்குரிய யோகாசனம் கலை அர்ஜென்டினாவையும் இந்தியாவையும் இணைக்கிறது என குறிப்பிட்டார்.

    ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை ஆக்கி போட்டியில் முதல் வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணியினருக்கு தனது நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.

    இந்தியாவின் கலைகள், இசை மற்றும் நடனம் ஆகியவை அர்ஜென்டினா நாட்டு மக்களை ஈர்த்துள்ளதுபோல், உங்கள் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, மாரடோனாவின் பெயர் எங்கள் நாட்டில் மிகவும் பிரபலம்.



    ஆரோக்கியம், நலம் மற்றும் அமைதிக்காக இந்தியா இந்த உலகத்துக்கு அளித்த பரிசு யோகாசனம். இந்தியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கு இடையிலான மிகநீண்ட தூரத்தை யோகாசனம் கலை இணைத்துள்ளது.

    யோகாசனக் கலை உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடலை வலிமைப்படுத்துவதுடன் மனதையையும் அமைதிப்படுத்துகிறது. ஒருவரின் மனதில் அமைதி இருந்தால் குடும்பம், சமூகம், நாடு மற்றும் உலகத்திலும் அமைதி நிலவும்.

    24 மணிநேரம் பயணம் செய்து 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை கடந்து நான் இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். உங்களுடைய அன்பையும், ஆர்வத்தையும் பார்க்கும்போது நான் வெளிநாட்டில் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்தியாவில் இருப்பதாகவே உணர்கிறேன் என்றும் மோடி குறிப்பிட்டார். #Yogaconnecting #Modi #G20summit #ModiinG20
    Next Story
    ×