search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலி 63 ஆக உயர்வு - 600 பேரை காணவில்லை
    X

    கலிபோர்னியா காட்டுத்தீக்கு பலி 63 ஆக உயர்வு - 600 பேரை காணவில்லை

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீக்கு பலியானோர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன 630 பேரை இழந்த உறவினர்கள் தவித்து வருகின்றனர். #CaliforniaFire #Californiawildfires
    நியூயார்க்:

    அமெரிக்காவின் சில மாநிலங்களில் கோடைக்காலங்களில் திடீரென்று காடுகள் தீபிடித்து எரிந்து குடியிருப்பு பகுதிகளுக்கும் தீ பரவுவதால் பல்லாயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா மாநிலத்தின் சியேர்ரா நெவேடா மலையடிவாரத்தில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ அம்மாநிலத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளையும், அருகாமையில் உள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்துள்ளது.



    இந்த தீயில் சுமார் 8 ஆயிரம் வசிப்பிடங்கள் நாசமாகின. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அப்பகுதிகளில் கடும் புகை மூட்டமாக உள்ளது. இதனால் தீயை அணைப்பது மீட்பு படையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. தீயில் வீடுகளை இழந்த பலர் குடும்பம் குடும்பமாக கார்கள் மூலம் தொலைவான இடத்துக்கு சென்று காருக்குள் தூங்கியபடி வாழ்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், கலிபோர்னியா வரலாற்றில் மிகப்பெரிய காட்டுத்தீயாக கருதப்படும் நிலையில் கருகிய நிலையில் நேற்று மேலும் 10 பிரேதங்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும், தீ சூழ்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்த 500-க்கும் அதிகமானவர்கள் காணாமல் போனதாக அவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்திருந்தனர். நேற்று ஒரே நாளில் 130 பேர் காணாமல் போனதாக புகார் குவிந்தது.

    அவர்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளில் அடைக்கலம் அடைந்துள்ளனரா? அல்லது, காட்டுத்தீயில் சிக்கிக் கருகி விட்டார்களா? என்னும் பீதி அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. #CaliforniaFire #Californiawildfires
        
    Next Story
    ×