என் மலர்
செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ராஜபக்சே அணிக்கு தாவினார் - துணை மந்திரியாக பதவியேற்பு
இலங்கை அரசியல் குழப்பங்களுக்கு இடையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்.பி. வியாழேந்திரன் இன்று ராஜபக்சே அணிக்கு தாவி துணை மந்திரியாக பதவியேற்றார். #rajapaksa #Viyalendiran #ranilwickramasinghe #sirisena
கொழும்பு:
ரணில் விக்ரமசிங்கே - மகிந்த ராஜபக்சே இவர்களில் இலங்கையின் பிரதமர் யார்? என்று விரைவில் பலப்பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் இன்று ராஜபக்சே தலைமையிலான அணிக்கு தாவினார்.
மேலும், அபிவிருத்தி (கிழக்கு அபிவிருத்தி) துணை அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #rajapaksa #Viyalendiran #ranilwickramasinghe #sirisena
Next Story






