என் மலர்
செய்திகள்

இந்தோனேசியா - நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட 22 பேர் பலி
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Indonesia #Landslide
ஜகார்த்தா:
இந்தோனேசியாவில் கடந்த மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி ஆயிரக்கணக்கில் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாணவர்கள் உள்பட் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் வடபகுதியில் அமைந்துள்ள மண்டெய்லிங் நடால் மாவட்டத்தில் உள்ள மவுரா சலாதி கிராமத்தில் இஸ்லாமிக் உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி அந்த பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 11 மாணவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 11 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியாகினர். இதையடுத்து நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும், 15-க்கு மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர் என பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesia #Landslide
Next Story






