என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விமான தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்
    X

    ரபேல் விமான தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட்டார் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்

    மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் விமானங்களை தயாரிக்கும் ரபேல் தொழிற்சாலையை பார்வையிட்டார். #NirmalaSitharaman #DassaultAviation
    பாரிஸ் :

    பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி புளோரன்ஸ் பார்லேயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இருநாட்டு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்தியா-பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அலோசனை நடத்தப்பட்டது. மேலும், இரு நாடுகளும் இணைந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ப்ளோரன்ஸ் பார்லி மற்றும் நிர்மலா சீதாராமன் இருவரும் தனியாக சந்தித்து பேசினர்.

    பின்னர் ரபேல் விமானங்களை தயாரிக்கும் டஸ்சால்ட் தொழிற்சாலையைக்கு சென்று நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். தொடர்ந்து டஸ்சால்ட் தலைமை செயல் அதிகாரி எரிக் ட்ராப்பியரை சந்தித்து பேசினார். அங்கு பிரான்ஸ் நாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தி குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு மறுப்பு தெரிவித்து அவர் கூறியதாவது: .

    ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது. இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என தெரிவித்தார். #NirmalaSitharaman #DassaultAviation
    Next Story
    ×