search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி
    X

    வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆஸ்பத்திரியில் அனுமதி

    ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #KhaledaZia #Khaledaadmitted
    டாக்கா:

    ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வங்காளதேசம் நாட்டின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    வங்காளதேசம் நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த போராட்டத்தின்போது பேருந்து மீது வெடிகுண்டுகளை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவும் குற்றவாளியாக இணைக்கப்பட்டார்.
     
    ஏற்கனவே ஊழல் வழக்கில் ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட கலிதா ஜியாவுக்கு இந்த கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் ஜாமின் அளித்தது. இந்த ஜாமினுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.



    அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவை டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கடந்த 4-10-2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதைதொடர்ந்து, சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்ட கலிதா ஜியா(73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். #KhaledaZia #Khaledaadmitted  
    Next Story
    ×