என் மலர்
செய்திகள்

பல்கேரியாவில் பஸ் விபத்து - 15 பேர் பலி
பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியா அருகே பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். #BulgariaBusAccident
சோபியா:
பல்கேரியா நாட்டின் தலைநகர் சோபியா அருகே அமைந்துள்ள இஸ்கார் பள்ளத்தாக்கு அருகே சுற்றுலா பேருந்து சென்று கொண்டிருந்த போது, வளைவில் திரும்புகையில், எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 15 பேர் சம்பவ இடத்திலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருசிலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து குறித்த தகவலை அந்நாட்டின் சுகாதாரத்துறை மந்திரி கிரில் அன்னீவ் உறுதிபடுத்தியுள்ளார். #BulgariaBusAccident

Next Story